By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS


தன்னை
அழகாய்த் தோற்றமழிக்காத
கண்ணாடியை
நிலத்தில் போட்டு நொறுக்கியும்

தன் எழுத்துக்களின் 
நேர்த்தியை நாசப்படுத்திய
பேனை முனையை
சுவரில் குத்திக் காயப்படுத்தியும்

கையில் பிடிபட மறுத்த
கிரிகட் போள்மீது
காறித்துப்பி காலால் உதைத்தும்

போளை அடிக்காமல் விட்ட
பெட்டை
கொங்கிறீட் கல்லில் ஊனப்படுத்தியும்

தனக்கு விடை தெரிந்த
வினாவை
பரீட்சைத் தாள்களில்
சேர்க்காமல் விட்டவனது
தாயின் குறியை இகழ்ந்தும்

தன்னை சூழ்ந்துள்ளவைகளினால்
வஞ்சிக்கப்பட்டு......!.??
வக்கிரமாகப் பழிவாங்கிக் கொண்டும்
விரக்தியுடன் வாழ்கிறான்

எங்களையும் உங்களையும்
போல் ஒருவன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment