ஆற்றங்கரையோரம்
பார்க்கவே அரிகண்டமாக ஒதிங்கிக் கிடக்கும்
நுரைகள் தான்
நரகலாக்கப்பட்ட அவள் ஆசைகள்
அவள் வாழ்க்கை ஆற்றில்
முகிழ்ந்து மேலெழும்பிய
அத்தனை ஆசை நுரைகளும்
சூழ்ந்திருக்கும் சமூகக் காற்றினால்
அதட்டி உறிக்கி ஒதுக்கப் பட்டுவிடுகின்றன
தொடரும் ஓரங்கட்டப்படுதல்களால்
வீங்கி வெடித்த ஆசைகளின் வெப்புசாரங்கள்
அவளது மன ஓரங்களைச் சுற்றி
இன்னும் நாறிக் கொண்டுதான் இருக்கின்றன.







0 comments:
Post a Comment