By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

ஒற்றையடிக் குளத்துப் பாதை

ஒற்றையடி இருட்டுப் பாதையில்

குறுக்கும் மறுக்குமாக
தவளைகளின் றப்பர் பாய்ச்சல்

பாதையின்
இரு ஓரங்களில் இருந்து விரியும்
குளப் பரப்பில்
'குளுக்' புளுக்' சப்தங்கள்

நிலவு மறைக்கும் மேகங்களில்
மெல்ல வடியப் பார்க்கும்
ஒளியின் ஊறல்

தூரத்து இருளில்
கலர் கலர் வெளிச்சப் பொட்டுக்கள்
வீடு வாகனம் கடை ஹோட்டல்கள்

சைக்கிளின் டைனமோ லைட்டுடன்
விட்டில்களின்
வன்முறைப் போராட்டம்

இத்தனைக்கும் மத்தியில்
உள்ளூர ஊசிகுத்தும் 
தென்படாத சர்ப்பத்தின் வாடை
தென்படும் தேழ்களின் சாடை

சற்றுத் தொலைவில்
பாதையின் தொங்கல்
பாதிப்பின்றி சென்றடைந்தால் போதும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment