சமூகத்து எதிர்பார்ப்புகள்
உமிழ்ந்து கொண்டிருக்கும்
எச்சில்களை
கொஞ்ச மாச்சிலும்
வழித்து உதறிவிட
அவனை ஆட்டிப் படைக்கும்
பொல்லாப் போன சுயம்
இம்மியளவும்
இடம் தருவதாய் இல்லை.
அவனைப் பொறுத்த வரைக்கும்
அவன் ஒரு தனி உலகாம்
அவன் சுயம்
அவ்வுலகத்து தனிக்கற ராஜாவாம்
ராஜாவின் விருப்பங்கள் தான்
அவ்வுலகின் நிகழ்வுகளாம்...
பிறகு எப்படித் தான்
வேற்றுக் கிரக வாசிகளின்
எதிர்பார்ப்புகள்
அவன் உலகில்
வாழ்வியல் முறைவழியாக முடியும்..?
அவன் நிலைப்பாடு தான்
அது என்றான பிறகு
எந்த சமூகமும்
காரி உமிழ்ந்தென்ன..?
முக்கி மூத்திரமே பேய்ந்தென்ன..?
அவன் சுயம் தான்
அவை எதையுமே
உணர விரும்ப வில்லையே...
0 comments:
Post a Comment