வேலை செய்த அசதியில்
சூரியன்
நேரகாலத்துடன் தூங்கிவிட்டாலும்
இன்னும்
இருட்டுப் போர்வையை
வானம்
விரித்துக் கொள்ளாத
அந்திப் பொழுதில்,
என் தங்கை எறிந்த கல்
குளத்தில் விழுந்து
காகம் மேகம் வானம்
அத்தனையையும் அதட்டிப்பார்த்தது....
காகங்கள் கரைந்து கலைந்து விட்டன.
வானம் மேகம்
இரண்டின் முகத்திலும்
இன்னும் பயத்தின் ரேகைகள்
வட்டமடித்து விரிந்தவாரு....






0 comments:
Post a Comment