ஊமையின் முழு உணர்வுகளுக்குமான
தனி உச்சரிப்புகளாய்
எம் சமூகத்துப் பெண்களின்
தனித்துவ மொழிதான் கண்ணீர்.
ஏக்கங்களின் உஷ்ணங்கள்
உயிர் சுட்டு மனதை வேகவைத்தாலும்
ஆதங்கங்களின் ஆழம் எல்லைமீறி
மூச்சுத் திணறினாலும்
அர்த்தமற்ற சுமைகள்
கணக்கு வழக்கின்றித் திணிக்கப்பட்டு
விழுங்கமுடியாமல் தொண்டை பொறுத்தாலும்
சோகம் இருண்ட
புதர்ப் பாதைப் பயணத்தில்
இறைவன்
மின்மினிகளையாவது
அனுப்ப மறந்திடும் பொழுதும்
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த
அனுமதிக்கப்பட்ட
உத்தியோகபூர்வ மொழிதான்
கண்ணீர்







0 comments:
Post a Comment